செய்திகள் :

’வேண்டாம்’ இப்போது எப்படியிருக்கிறார்... ரூ.22 லட்சம் சம்பளத்தில் ஜப்பானுக்கு சென்றுவிட்டாரா?

post image

திருத்தணியைச் சேர்ந்த 'வேண்டாம்’ என்கிற மாணவியை நினைவிருக்கிறதா..? கொரோனாவுக்கு முன்னால் பரபரப்பாக பேசப்பட்ட சிலரில் மிக முக்கியமானவர் இந்த மாணவி. இவருடைய ’வேண்டாம்’ என்கிற பெயருக்காக மட்டுமல்ல,  கேம்பஸ் இன்டர்வியூவில் ஜப்பானிய கம்பெனி ஒன்றில் வேலை பார்க்க இவர் செலக்ட் ஆகி இருந்ததும், வருடம் 22 லட்சம் ரூபாய் இவருடைய பேக்கேஜ் என்பதும் கூடத்தான் இவர் தமிழ்நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டதற்கு முக்கியமான காரணம்.

வேண்டாம் இப்போது எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் என்று போன் செய்து விசாரித்தோம்.

வேண்டாம் பெற்றோர் மற்றும் தங்கையுடன்

"எங்க வீட்ல நாங்க நாலு பொண்ணுங்க. மூணாவதா நான் பொறந்தப்போ ஊருக்குள்ள பலரும் எங்க அம்மாவையும் அப்பாவையும் ரொம்ப கேலி பேசினாங்களாம். அதனால, எங்க பாட்டி ’இந்தப் பொண்ணுக்கு அதாவது எனக்கு `வேண்டாம்’னு பேர் வெச்சா அடுத்ததா பிறக்கிற குழந்தை கண்டிப்பா பையனா தான் பிறக்கும்னு சொன்னாங்களாம். எனக்கு `வேண்டாம்’னு பேர் வந்த கதை இதுதான். ஆனா, எனக்கு அடுத்து பொறந்ததும் தங்கச்சி பாப்பா தான்.” என பெயர்க் காரணத்தை சிம்பிளாக விளக்கினார்.

மேலும் தொடர்ந்தவர், ```அக்காங்களுக்கு ஷன்மதி, யுவராணி, தங்கச்சிக்கு சரண்யானு அழகழகா பேர் வெச்சிருக்கீங்க. எனக்கு மட்டும் இப்படி ஒரு பேரை வச்சு ஸ்கூல், காலேஜ்னு வெளியில போற வர்ற இடங்கள்ல எல்லாம் என்னை எல்லோரும் கேலி, கிண்டல் செய்ற மாதிரி பண்ணிட்டீங்கல்ல’ அப்படின்னு அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் அடிக்கடி சண்டை போடுவேன். ஆனாலும் அந்தக் கோபம் எல்லாம் கொஞ்ச நேரம்தான் இருக்கும். ஏன்னா எங்க அப்பா தறி நெய்கிற வேலை, விவசாயம்னு கடுமையா உழைச்சு எங்க நாலு பேரையும் நல்லா படிக்க வச்சிருக்கார்.

மூத்த அக்கா இங்கிலீஷ் லிட்ரேச்சர், ரெண்டாவது அக்கா பிஎஸ்சி. ரெண்டு பேருக்குமே நல்லபடியா கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாரு. மூணாவது நானு. நான் இன்ஜினியரிங் படிச்சுக்கிட்டு இருந்தப்போ தான் கேம்பஸ் இன்டர்வியூவுல ஜப்பான்ல வேலை கிடைச்சு நீங்க என்கிட்ட பேசினீங்க. என் தங்கச்சி பி.எஸ்சி படிச்சிருக்கா’’ என்றவர், தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். 

வேண்டாம் கல்லூரி படிக்கையில்

"ஜப்பான்ல வேலை கிடைச்சது. ஆனா, கொரோனா காரணமா உலகமே ஸ்தம்பிச்சு போனதால அந்த வாய்ப்பு அப்போ கைநழுவிப் போயிடுச்சு. ஆனா 2023-ல மறுபடியும் ஜப்பான்ல இருந்து வேலைக்கு கூப்பிட்டாங்க. 2022-ல எனக்கு உடம்பு சரியில்லாம போனதால, அந்த நேரத்துலேயும் என்னால அந்த வாய்ப்பை பயன்படுத்திக்க முடியல.

இப்போ இந்தியாவுல ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துட்டிருக்கேன். இங்கேயும் ஒரு ஜப்பான் புராஜெக்ட் தான் பண்ணிட்டிருக்கேன். இப்போ நான் டெக்னிக்கல் லீடா அந்த கம்பெனியில இருக்கேன். சம்டைம்ஸ் யாராவது என் பெயருக்கு என்ன அர்த்தம்னு கேட்பாங்க. காலேஜ் படிக்கிறப்ப எல்லாம் இப்படி யாராவது கேட்டா ரொம்ப வருத்தமா இருக்கும்.

பேர் வெச்ச பாட்டி மேல கோவம்கூட வரும். மத்தவங்களோட கேலி, கிண்டல் காரணமா அழுகைகூட வந்து இருக்கு. ஆனா, இப்ப அப்படியெல்லாம் இல்ல மேடம்... என் பேருக்கு அர்த்தம் கேட்கறவங்க கிட்ட அதுக்கான அர்த்தத்தை இங்கிலீஷ்ல சொல்லிட்டு கூலா கடந்து போயிடுவேன். அந்த அளவுக்கு மெச்சூரிட்டி வந்துடுச்சு’’ என்றவரிடம், ’உங்களுக்கு வேண்டாம் என்று பெயர் வைத்த பாட்டி எப்படி இருக்கிறார்கள்’ என்றோம். 

’’பாட்டி இறந்துட்டாங்க’’ என்று வருத்தத்தோடு ஷேர் சொன்னவரிடம், ’உங்களுக்குப் பிடித்த பேரை மாற்றிக்கொள்ளப் போறதாக சொன்னீர்களே, அது என்னவாயிற்று’ என்றோம். 

வேண்டாம்

’’என்னோட ஜாதக பேர் கல்பனா. அந்தப் பேரை தான் கெசட்டில் மாத்திக்கப் போறேன். வேலை ரொம்ப டைட்டா இருக்கு, அப்பாவும் என் பேரை கெசட்டில் மாற்றுவது தொடர்பா ரெண்டு, மூணு தடவை சம்பந்தப்பட்ட ஆஃபீஸ்க்கு போயிட்டு வந்துட்டாரு. ஆனா, இன்னும் பேர் இன்னும் மாத்த முடியல. அந்த பிராசஸ் போயிட்டு இருக்குங்க மேம். அப்பாவும் ரொம்ப பிசியா இருக்கறதுனால பேர் மாத்துற வேலைய சட்டுன்னு முடிக்க முடியல. அடுத்த தடவை நீங்க பேசுறப்போ கல்பனான்னு எனக்குப் பிடிச்ச பேர சொல்லி கூப்டாலும் கூப்டுவீங்க’’ என்று செம பாசிட்டிவாக பேசி முடித்தார் `வேண்டாம்’. 

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்... சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி துணை தலைவர்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள சேரம்பாடி, பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. தான் அணிந்திருந்த தங்க காதணிகளை குடும்ப சூழ்நிலை காரணமாக அடகு வைப்பதாற்காக சேரம்பாடி கடைவீதிக்கு கொண்டு சென்றிரு... மேலும் பார்க்க

Tsunami 20 : 'எங்கும் பிணக் குவியல்; மனதை மரத்துப்போக வைத்துத்தான்...' - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வழக்கமான ஒரு ஞாயிறு தினமாகவே இருந்திருக்கும், அந்த ஒரு சம்பவம் மட்டும் நடக்காமலிருந்திருந்தால். ஆனால், சுமத்திரா தீவில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் அங்கு மட்டுமல்ல... மேலும் பார்க்க

ஒரு ஜாக்கெட் தைக்கிறதுக்கு ஒரு ரூபாதான் கூலி- ஒரு டெய்லரின் கதை

தைக்க வேண்டிய துணிகளைப் போட்டு வெட்டுறதுக்கு ஒரு மர டேபிள், தையல் மெஷின்கள், கடை நிறைய கலர் கலரா துணிகள்... இவற்றுக்கு நடுவுல சையத் மதர் வேலைபார்க்கிறதுக்கு கொஞ்சம் இடம். இவ்ளோ தான் சையத் மதரோட டெய்லர... மேலும் பார்க்க

ஒரு போலீஸ்காரரின் கருணைக் கனவு... நிறைவேற்றி வரும் மகள் | Old Age Home | Human Story

அப்பாவின் கனவு...அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்காக அனகாபுத்தூரில் இலவச முதியோர் இல்லம் நடத்தி வருகிறார் ஜெயசித்ரா. ஆண், பெண் என 30 பேர் அந்த இல்லத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வார இறுதி நாள் ஒன்றில்,... மேலும் பார்க்க

தார்ப்பாய் மூடிய வீடு; ஓதம் ஏறிய தரை-மாற்றுத்திறனாளி மகன்களை பராமரித்து வரும் முதியவரின் துயரக் கதை

இரண்டு மாற்றுத்திறனாளி மகன்களைப் பராமரித்து வாழ்ந்து வரும் 80 வயது முதியவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவரைக் காண்பதற்காகச் சென்றோம்.தார்ப்பாய் மூடிய குடிசை வீடும், ஓதம் ஏறிய தரையும், உடைபாடுகளுடன் இ... மேலும் பார்க்க

அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டே சரிந்த கிறிஸ்துமஸ் தாத்தா... குன்னூரில் நடந்த சோகம்!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கிறது. திருச்சபைகள் மூலம் மக்களின் வீடுகளுக்குச் சென்று... மேலும் பார்க்க