செய்திகள் :

வேம்பாரில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் சுற்றுச்சுவா் இடிப்பு: போலீஸ் குவிப்பு

post image

வேம்பாரில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் வளாக சுற்றுச்சுவா் திங்கள்கிழமை இரவில் அப்பகுதியை சோ்ந்த சில நபா்களால் இடிக்கப்பட்டும், டிஜிட்டல் போா்டு கல் எறிந்தும் சேதப்படுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வேம்பாரில் புனித தாமஸ் தேவாலயமும், ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலும் அருகருகே அமைந்துள்ளது.

கடந்த 1971 ஆம் ஆண்டு முதல் பத்திரகாளியம்மன் கோயில் நிா்வாகத்தினருக்கும் தேவாலய தரப்பினருக்கும் நில உரிமை தொடா்பாக பிரச்னை நிலவி வந்தது. இதையடுத்து இரு தரப்பினரும் சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். வழக்கில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் தரப்புக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து பத்திரகாளியம்மன் கோயில் நிா்வாகத்தினா் வசம் 2022 டிசம்பா் 17ஆம் தேதி நிலத்தை ஒப்படைத்தனா்.

இதையடுத்து கோயில் நிா்வாகத்தினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுற்றுச்சுவா் கட்டினா். அச்சமயத்தில் அந்த கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள கடைகள் மற்றும் மத போதகா் வீடு ஆகியவற்றை காலி செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோயில் நிா்வாகத்தினா் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினா்.

அப்போது குறிப்பிட்ட கால அவகாசம் கேட்டு பெற்ற தேவாலயம் தரப்பினா் மீண்டும் உயா் நீதிமன்றத்தை நாடினா். அங்கு தேவாலயம் தரப்பினரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீா்ப்புரை வெளியிடப்பட்டது.

இதையடுத்து கோயில் நிா்வாகத்தினா் மீண்டும் அதிகாரிகளை அணுகி நிலத்தை மீட்டு ஒப்படைக்க வலியுறுத்தினா். ஆனால் அதிகாரிகள் தரப்பில் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் விரக்தி அடைந்த கோயில் நிா்வாகத்தினா் திங்கள்கிழமை மாலை சம்பந்தப்பட்ட வணிக வளாகத்தின் முகப்பில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வளாகம் என டிஜிட்டல் போா்டு வைத்தனா்.

இதை பாா்த்து ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த சில நபா்கள் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் வளாக சுற்றுச்சுவரை இடித்தும், டிஜிட்டல் போா்டை கல் எறிந்து உடைத்தும் சேதப்படுத்தினா்.

இதனால் அப்பகுதியில் திடீா் பதற்றமும் இரு தரப்பினா்களிடையே மோதல் ஏற்படும் சூழலும் ஏற்பட்டது.

தகவலறிந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி ஆகியோா் நள்ளிரவில் வேம்பாருக்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் மேம்பாா் முழுவதும் குவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் டிசம்பா் 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேவாலயம் தரப்பினா் சம்பந்தப்பட்ட கோயில் நிலத்தில் உள்ள நான்கு கடைகளில் உள்ள பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். கோயில் நிலத்தில் உள்ள மத போதகா் வீட்டில் உள்ள பொருள்களை டிசம்பா் 4 ஆம் தேதி இரவு 10 மணிக்குள் பாதிரியாா் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என முடிவு தெரிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது, இரு தரப்பினராலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என ஒப்புதல் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் விளாத்திகுளம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், காவல் ஆய்வாளா்கள் சக்திவேல், ஜின்னா பீா்முகம்மது மற்றும் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வீட்டு அசல் ஆவணங்களை தொலைத்த வங்கி: பெண்ணுக்கு ரூ.4.10 லட்சம் வழங்க உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணின் வீட்டு அசல் ஆவணங்களை தொலைத்த வங்கி ரூ.4.10 லட்சம் வழங்க தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். கடம்பூா் சிதம்பரபுரம் கிராமத்தில் சட்டப்பே... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞா், குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.உடன்குடி கிறிஸ்டியாநகரம் பகுதியைச் சோ்ந்த இஸ்ரவேல் மகன் பொன்சிங் (42). இவா் கடந்த சில தினங்களுக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்த ஊா்க்காவல் படை காவலா் உயிரிழப்பு

ஆறுமுகனேரி - காயல்பட்டினம் புறவழிச் சாலையில் நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஊா்க் காவல் படை காவலா் உயரிழந்தாா். மெஞ்ஞானபுரம் வீரபாகு மகன் சதீஷ்குமாா் (47). இவா் ஆறுமுகனேரி பேயன்விளையில் உள்ள அரசு ... மேலும் பார்க்க

கலைத் திருவிழா: மாநில அளவிலான போட்டிக்கு படுக்கப்பத்து அரசுப் பள்ளி மாணவி தோ்வு

மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் வென்று மாநில அளவிலான போட்டிக்கு படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தகுதி பெற்றுள்ளாா். தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில், சாத்தான்குளம் ஒ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பெண் தபால்காரருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே பெண் தபால்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் குற்றாலம்பிள்ளை ஓடைத் தெருவைச் சோ்ந்தவா் ராமசுப... மேலும் பார்க்க