யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!
வேலூரில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு
வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா். நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரித்திருந்தது. அதன்படி, வஞ்சிரம் கிலோ ரூ. 600 முதல் ரூ. 1,300 வரையும், சங்கரா ரூ. 450 முதல் ரூ. 600 வரையும், நண்டு ரூ. 450-க்கும், உளி ரூ. 350-க்கும், மத்தி ரூ. 160 வரையும் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.