செய்திகள் :

வேலூர்: வயதான தாயைப் போதையில் கொடூரமாகத் தாக்கிய மகன்; பதைபதைக்க வைத்த வீடியோ; பின்னணி என்ன?

post image

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள சந்தைமேடு காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மூதாட்டி அலமேலு. இவரின் மகன் அருண்குமார்.

மதுப் பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார் வேலைக்குச் செல்வதில்லை. திருமணமாகி மனைவி, இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையிலும் குடித்துவிட்டு அவர்களை அடித்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார்.

இதனால் வெறுப்படைந்த மனைவி, பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு அருண்குமாரைப் பிரிந்து சென்றுவிட்டார். வயதான தாய் அலமேலு ஆடு, மாடுகளை வளர்த்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் குடும்பச் செலவுகளைக் கவனித்து வருகிறார்.

கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள்

இந்நிலையில், தாய் என்றும் பார்க்காமல் மது குடிப்பதற்காகச் சரமாரியாக அவரைத் தாக்கி, பணம் பறித்துச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாராம் அருண்குமார்.

இந்நிலையில், வீட்டு வாசலில் மூதாட்டி அலமேலுவை மகன் அருண்குமார் கொடூரமாகத் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி நெஞ்சைப் பதைபதைக்க வைத்திருக்கிறது.

மதுபோதையில் தள்ளாடிக்கொண்டே தாயின் முடியைப் பிடித்து இழுத்துத் தாக்குகிறார். கையால் ஓங்கிக் குத்துகிறார்.

கீழே தள்ளி எட்டி உதைத்தும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்.

வலி தாங்க முடியாமல் கதறி அழுத மூதாட்டி அலமேலு மகன் அருண்குமாரின் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, "அடிக்காதடா" என்று கெஞ்சுகிறார்.

விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டுக்குள் இழுத்துச் செல்கிறார். இந்த சம்பவம் தினந்தோறும் நடைபெறுவதால் அந்தப் பகுதி மக்களும் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தும் அருண்குமார் திருந்தவில்லை.

அதன் பிறகே இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட அருண்குமார்

ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, வேப்பங்குப்பம் காவல் நிலைய போலீஸார் அருண்குமாரை இன்று (மார்ச் 24) கைது செய்தனர்.

விசாரணையில், வீட்டுக்குள் அழைத்து செல்லப்பட்ட அவரின் தாயைத் தூக்கில் தொங்கவிடுவதற்கும் முயன்றதாகத் தெரியவந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மூதாட்டியைச் சமூக நலத்துறை மூலம் மீட்டு காப்பகத்தில் தங்க வைக்கவும் காவல்துறையினர் முடிவு செய்தனர்.

ஆனால், "ஆடு, மாடுகளை விட்டு எப்படி வர முடியும்?" என்று மூதாட்டி அலமேலு சொன்னதால், அவரையும் அவரின் கால்நடைகளையும் பராமரிக்க வேறு முயற்சிகளைக் காவல்துறை செய்து வருகிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க