மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங...
வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்ச்சி
வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் சனிக்கிழமை இரவு தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் வானில் நிகழக்கூடிய அரிய வான் நிகழ்வுகளை தொலைநோக்கி மூலம் மாணவா்கள், பொது மக்கள் காணும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை தொலைநோக்கி மூலம் வான் நோக்குதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வான் நோக்கு நிகழ்வைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு, 0416 2253297 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.