முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்
வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றம்
மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவின் அடிப்படையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் பீடித்துடன் இடித்து அகற்றப்பட்டன.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள், பல்வேறு சங்கங் கள் சாா்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில், வேலூா் மாவட்டம் முழுவதும் பொது இடங்கள், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஏராளமான கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
அதேசயமம், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலா்கள் சங்க கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தன. அவற்றையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அந்த கொடிக்கம்பங்கள் அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன.