செய்திகள் :

வேலையை விட்ட தந்தை, 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் தாய்... சூர்யவன்ஷியின் முழுமையான பேட்டி!

post image

ஐபிஎல் தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி போடிக்குப் பிறகு முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பது தனக்கு சாதாரணமானது எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவா்களில் 209/4 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 15.5 ஓவா்களில் 212/2 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தானின் 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனைப் படைத்தாா்.

போடிக்குப் பிறகு வைபவ் சூர்யவன்ஷி தனது குடும்பம், அடுத்த என்ன செய்ய வேண்டும், எப்படி அணிக்கு தேர்வானது என்பது குறித்து பேசியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி பேசியதாவது:

முதல்பந்தில் சிக்ஸர் அடிப்பது சாதாரணமானது

முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பது எனக்கு சாதாரணமான விஷயம். இந்திய அணிக்காக யு-19 விளையாடியுள்ளேன். அதிலும் உள்ளூர் போட்டிகளிலும் முதல் பந்தில் சிக்ஸர்கள் அடித்துள்ளேன்.

முதல் 10 பந்துகள் விளையாடுவதில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. எனக்கு சாதகமான இடத்தில் பந்து விழுந்தால் நிச்சயமாக அடிப்பேன் என்பது மட்டும் எனது மனதில் தெளிவாக இருக்கும்.

நான் முதல் போட்டியில் விளையாடுகிறேன் என்றெல்லாம் நினைக்கமாட்டேன். எனக்கு எதிராக சர்வதேச பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரிய போட்டி எல்லாம் தெரியும். ஆனால், நான் என்னுடைய ஆட்டத்தை ஆடுகிறேன்.

எனது வெற்றிக்கு பெற்றோர்களே காரணம்

நான் இப்போது என்னாவாக இருக்கிறோனோ அதற்கு எனது பெற்றோர்களே காரணம். எனது பயிற்சிக்காக எனது அம்மா எனக்காக உணவு சமைக்க அதிகாலையில் 3 மணிக்கே எழுந்துவிடுவார். இரவு 11 மணிக்குதான் தூங்குவார். கிட்டதட்ட 3 மணி நேரம் உறக்கம்தான்.

எனது தந்தை எனக்காக அவரது வேலையை விட்டார். எனது அண்ணாதான் எங்களது குடும்பத்தைப் பார்த்துகொள்கிறார்.

எனது தந்தை என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். கடினமாக உழைப்பவர்களுக்கு கடவுள் கைவிடமாட்டார். இந்த சாதனைகள் எல்லாம் எனது பெற்றோர்களே காரணம்.

இந்திய அணிக்கு தேர்வாகும்வரை கடினமாக உழைப்பேன்

நான் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன். அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அந்த அளவுக்கு செல்லும்வரை எனது உழைப்பை கைவிட மாட்டேன். இந்திய அணிக்காக நன்றாக விளையாட வேண்டும்.

ராஜஸ்தான் அணியில் விளையாட இதற்காகதான் நிண்ட காலமாக பயிற்சி எடுத்து வந்தேன். நான் நினைத்தமாதிரி நடந்ததுக்கு மகிழ்கிறேன்.

பயிற்சியில் நான் நன்றாக விளையாடினேன். அப்போது பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர், அணியின் மேலாளர் ரோமி உடன் இருந்தார்கள். என்னை அணியில் எடுப்பதாகக் கூறினார்கள். என்னை ராகுல் திராவிட் சாருடன் அறிமுகப்படுத்தினார்கள்.

அணியில் பலரும் எனக்கு ஆதர்வு அளித்தார்கள். ராகுல் சார் தலைமையில் பயிற்சி எடுப்பது எனக்கு கனவு நனவானது போல் இருந்தது. அடுத்து என்ன நடந்தாலும் எனக்கு கவலையில்லை என்பதுபோல் அவர்கள் என்னை உற்சாகம் ஊட்டினார்கள் என்றார்.

டெல்லியை வென்றது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபி... மேலும் பார்க்க

கொல்கத்தாவுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்; வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான்... மேலும் பார்க்க

கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ள 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற... மேலும் பார்க்க

சூரியவன்ஷி ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார்! - சிறுவயது பயிற்சியாளர்

இளம் வீரர் சூரியவன்ஷி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் ர... மேலும் பார்க்க