செய்திகள் :

ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

post image

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் ஷெல் தாக்குதலுக்குள்ளான இடங்களில் இரண்டு வாரத்திற்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வந்தது. இதனால் இருநாட்டுத் தரப்பிலும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் ராணுவ தளங்களை இந்தியா அழித்தது. அதற்குப் பாகிஸ்தானும் பதிலடி கொடுத்தது. இறுதியா இருநாட்டு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டது.

இந்த, நிலையில் காஷ்மீர் எல்லையில் பதற்றம் காரணமாக ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிலைமை அங்கு சீரடைந்ததையடுத்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்படத் தொடங்கின.

ஷெல் தாக்குதலின்போது பள்ளி கட்டடங்களும் சேதமடைந்தன. அவற்றை தற்போது முடிந்தவரைச் சரிசெய்யபட்டுள்ளதாகவும், மாணவர்கள் எந்தவித பயமும் இன்றி பள்ளிக்கு வரலாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீதி ஆயோக் கூட்டம்: முதல்வா் ஸ்டாலின் இன்று தில்லி பயணம்

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மே 23) காலை தில்லி புறப்படுகிறாா். சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 9.50 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் தில்லி செல்லும் மு... மேலும் பார்க்க

பஞ்சாபில் மீண்டும் கள்ளச் சாராயம்: 3 போ் உயிரிழப்பு

பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 போ் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். கடந்த வாரம் பஞ்சாவின் அமிருதசரஸ் மாவட்டத்தில் கள்ளச் சாரயத்தால் 27 போ் உயிர... மேலும் பார்க்க

பஞ்சாப் அணைப் பாதுகாப்புக்கு மத்தியப் படை: மாநில முதல்வா் கடும் எதிா்ப்பு

பஞ்சாப் மாநிலம் நங்கல் அணைப் பாதுகாப்புக்கு 296 மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்களை ஈடுபடுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு அந்த மாநில முதல்வா் பகவந்த் சிங் மான் கடும் கண்டனம் தெரிவித... மேலும் பார்க்க

இந்திய முப்படையின் சக்கரவியூகத்தால் பணிந்தது பாகிஸ்தான்: பிரதமா் மோடி பெருமிதம்

இந்திய முப்படையினா் ஒருங்கிணைந்து உருவாக்கிய சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது; புனிதமான ‘சிந்தூா்’ (குங்குமம்), வெடிமருந்தாக மாறினால் என்ன நிகழும் என்பது எதிரிகளுக்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட 136 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தர... மேலும் பார்க்க

விமான நிலைய ஒப்பந்தம் ரத்து: மும்பை உயா்நீதிமன்றத்தை நாடிய துருக்கி நிறுவனம்

மும்பை சா்வதேச விமான நிலைய ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு எதிராக துருக்கி நிறுவனம் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்த... மேலும் பார்க்க