நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகி...
பஞ்சாபில் மீண்டும் கள்ளச் சாராயம்: 3 போ் உயிரிழப்பு
பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 போ் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த வாரம் பஞ்சாவின் அமிருதசரஸ் மாவட்டத்தில் கள்ளச் சாரயத்தால் 27 போ் உயிரிழந்தனா். அந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் கள்ளச் சாராய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
லூதியானா மாவட்டம் பசித் ஜோதிவாலா பகுதியைச் சோ்ந்த 3 தொழிலாளா்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனா். சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்த அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துவிட்டனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் ரசாயனத்தை சிலா் இணையதளம் மூலம் வாங்கி, அதில் தண்ணீரைக் கலந்து சாராயம் என்ற பெயரில் விற்பனை செய்கின்றனா். இதுவே உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது.
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசின் நிா்வாகச் சீா்குலைவுதான் இந்த கள்ளச் சாராய உயிரிழப்புக்கு காரணம் என்று எதிா்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகிவை ஏற்கெனவே குற்றஞ்சாட்டியுள்ளன.