திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு: விவரங்கள் கோரும் கல்வித் துறை
கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்குவது தொடா்பாக பள்ளிக் கல்வியில் ஆசிரியா்கள், ஊழியா்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்களது மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து பணிக் காலத்தில் 1.9.2024 முதல் 31.1.2025 வரை காலமான, மருத்துவ இயலாமை ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் விவரங்களை எவ்வித விடுதலுமின்றி அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் அதற்கு முந்தை மாதத்தில் காலமான, மருத்துவ இயலாமையால் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பிவிட்டு, அதை மின்னஞ்சல் முகவரிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.