காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
ஸ்பிரிட் படப்பிடிப்பு அப்டேட்!
நடிகர் பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இரண்டு படங்களும் இந்தியளவில் பேசப்பட்டதால் முக்கியமான இயக்குநராகியுள்ளார்.
இவர் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து ’ஸ்பிரிட்’ என்கிற படத்தை இயக்குகிறார். மிகப்பெரிய வன்முறைப் படமாக இது இருக்கும் என வங்கா தெரிவித்திருந்தார்.
இதில் வில்லனாக பிரபல கொரியன் நடிகர் மா - தாங் சியோக் நடிக்கிறார். நாயகியாக தீபிகா படுகோன் நடிப்பதாகக் இருந்தது. ஆனால், இயக்குநருக்கும் அவருக்குமான கருத்து வேறுபாடுகளால் தீபிகா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நடிகை த்ரிப்தி டிம்ரி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் வணிகம் செய்யும் நோக்கில் பல மொழிகளில் படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: நடிகர் அஜித் குமாருடன் எப்போது இணைவீர்கள்? லோகேஷ் கனகராஜ் பதில்!