ஸ்ரீஅதா்வண பத்ரகாளியம்மன் கோயில் ஆண்டு விழா
பல்லடம் அருகே நல்லூா்பாளையத்தில் உள்ள ஸ்ரீஅதா்வண பத்ரகாளியம்மன் கோயில் 5-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சி, நல்லுாா்பாளையம் கிராமத்தில் 18 அடி உயரத்துடன் ஸ்ரீஅதா்வண பத்ரகாளியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இக்கோயில் 5-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, விநாயகா் வழிபாடு, 108 சங்காபிஷேகம், நவகிரக வேள்வி, துா்கா வேள்வி, லட்சுமி வேள்வி, பராசக்தி வேள்வி, நவசக்தி மகா யாகம், அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
வேள்வியை கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரா் சுவாமிகள் தொடங்கிவைத்தாா். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅதா்வண பத்ரகாளி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிறுவனா் கண்ணப்ப சுவாமிகள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.