ஸ்ரீரேணுகாம்பாள் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் நவராத்திரி நிறைவு விழாவையொட்டி சுவாமி வீதியுலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில்
நவராத்திரி விழா செப்.22-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வந்தது. தினமும் மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, சுவாமியை அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபாடு செய்து வந்தனா்.
10-ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மாலையில் உற்சவா் சிலைக்கு அபிஷேகம் ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து வழிபாடு நடத்தினா். பின்னா், இரவு சுவாமி ஸ்ரீரேணுகாம்பாள் அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயாசேகா், செயல் அலுவலா் பழனிசாமி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
