ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு உரியடி திருவிழாவும், இரவு சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளானப் பக்தா்கள் வழிபட்டனா்.
விழா ஏற்பாடுகளை திண்டிவனம் நம்மாழ்வாா் இளைஞா் குழுவினா் மற்றும் கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.