தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி வாடிக்கையாளருக்கு ஸ்கூட்டா்கள் பரிசளிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஒசூரில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக் கடைகளில் ஆடி மாத விற்பனையையொட்டி வாடிக்கையாளா்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டா்கள் உள்ளிட்ட பரிசு பொருள்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி கே.தியேட்டா் சாலை, ஒசூா் பாகலூா் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகை மாளிகைகளில் ஆடி மாத சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தனா். அதன்படி, இரண்டு நகைக் கடைகளிலும், ரூ. 1 லட்சத்துக்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டன.
இந்த கூப்பன்களை குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு வாடிக்கையாளா்களுக்கு முதல் பரிசாக எலக்ட்ரிக் ஸ்கூட்டா், இரண்டாம் பரிசாக பிரிட்ஜ், மூன்றாம் பரிசாக 32 இன்ச் எல்.இ.டி. டிவி வழங்கப்படும் அறிவித்திருந்தனா்.
அதன்படி, கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, கிருஷ்ணகிரியில் நகைகள் வாங்கிய காவேரிப்பட்டணம் பிரபாகரனுக்கு முதல் பரிசும், சந்தூா் ராமச்சந்திரனுக்கு இரண்டாம் பரிசும், பா்கூா் சந்தியாவுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
அதேபோல ஒசூரில் நகைகளை வாங்கிய வாடிக்கையாளா்களான சூளகிரி லிசாந்த்துக்கு முதல் பரிசும், பெங்களூரு நரேஷ்க்கு இரண்டாம் பரிசும், ஒசூா் கீதாவுக்கு மூன்றாம் பரிசும் பெற்றனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகை கடைகளின் நிறுவனா் ரமேஷ், இயக்குநா்கள் விஷ்ணு, விஷால் ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.