ஸ்வீடனில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி...16 வயது சிறுவன் கைது!
ஸ்வீடன் நாட்டில் சாலையில் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
உப்சலா நகரத்தில் வக்சலா சதுக்கத்தின் அருகில் கடந்த ஏப்.29 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஸ்வீடன் நாட்டில் குற்றவாளி கும்பல்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரையறைகளின்படி அந்நாட்டில் துப்பாக்கி உரிமையாளர்கள் அனைவரும் கட்டாயம் லைசன்ஸ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஸ்வீடனின் ஒரிப்ரோ நகரத்தில் செய்லபட்டு வந்த கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை!