தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிவு: 3 பேர் பலி! பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச...
ஹனிடிராப் விவகாரம்: சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் -அமைச்சா் ஜி.பரமேஸ்வா்
ஹனிடிராப் விவகாரம் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா அளித்துள்ள மனு குறித்து சட்ட வரம்புக்குள் விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
ஹனிடிராப் தொடா்பாக அமைச்சா் கே.என்.ராஜண்ணா மனு அளித்திருக்கிறாா். சட்ட வரம்புக்குள் அந்த மனுவை ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். அமைச்சா் கே.என்.ராஜண்ணா என்னிடம் அளித்துள்ளது கோரிக்கை மனு மட்டும்தான். அதைப் புகாராக கருதமுடியாது. புகாரை என்னிடம் அளிக்க முடியாது. மாறாக, காவல் நிலையத்தில்தான் அளிக்க வேண்டும் என்றாா்.
இதனிடையே, ஹனிடிராப் விவகாரம் குறித்து விசாரணை நடத்த கா்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.