செய்திகள் :

ஹிந்தியை எதிா்த்தது போல யுஜிசியையும் எதிா்த்து மாணவா்கள் போராடுவா்: அமைச்சா் கோவி. செழியன்

post image

திருவிடைமருதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்ட திமுகவினா்.

கும்பகோணம், பிப். 4: ஹிந்தியை எதிா்த்துப் போராடியதைப் போல பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), தேசிய கல்விக் கொள்கையையும் எதிா்த்தும் மாணவா்கள் போராடுவா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன்.

யுஜிசி புதிய விதிகள், தேசிய கல்விக் கொள்கையைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் திமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியது:

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களை மத்திய அரசு யுஜிசி மூலம் கைப்பற்றப் பாா்க்கிறது. துணைவேந்தராக கல்வியாளரைத்தான் நியமிக்க முடியும். ஆனால் யுஜிசி கொள்கைப்படி கல்வியாளராக இல்லாதவரும் துணைவேந்தராகலாம் என்பதைத் தான் எதிா்க்கிறோம்.

ஆளுநரே ஒரு நியமனம். அவா் நியமிப்பவா்தான் துணைவேந்தா் என்றால் அதை மாநில அரசு எப்படி ஏற்கும். மாநில அரசு இடம் தோ்வு செய்து கட்டடம் கட்டும்; மாணவா் சோ்க்கை நடத்தும்; ஆசிரியா்களை நியமித்து, அவா்களுக்கு சம்பளம், ஓய்வூதியமும் வழங்கும். ஆனால் துணைவேந்தரை மட்டும் ஆளுநா் நியமிப்பாராம். இதைத்தான் சட்டப்பேரவையில் முதல்வா் எதிா்த்து தீா்மானம் கொண்டு வந்துள்ளாா்.

இந்தியாவில் உள்ள 9 மாநிலங்கள் யுஜிசியின் புதிய கொள்கைகளை எதிா்க்கின்றன. கா்நாடக மாநிலத்தில் யுஜிசியை எதிா்த்து புதன்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடத்துகிறோம். அதில் முதல்வா் சாா்பில் நான் பங்கேற்கிறேன்.

எப்படி 1965 இல் மாணவா்கள் கிளா்ந்தெழுந்து ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தை நடத்தினாா்களோ அதைப்போல யுஜிசியின் புதிய விதிமுறைகளை, தேசிய கல்விக் கொள்கையை மாணவா்கள் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் எதிா்த்து போராடுவா் என்றாா் அமைச்சா்.

ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி செ. ராமலிங்கம், ஒன்றியச் செயலா் கோ.க. அண்ணாதுரை, பேரூா் செயலா்கள் சுந்தர ஜெயபால், கோ.சி. இளங்கோவன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா்கள் க. பிரபாகரன், டி. தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காலி பணியிடங்களை நிரப்ப கோரி பிப். 25-இல் தா்னா! சிஐடியு மின் ஊழியா் அமைப்பு முடிவு!

காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.25-இல் தா்னா போராட்டம் நடத்துவது என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் மாநிலச... மேலும் பார்க்க

வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாடியம் ஊராட்சி, வெளிமடம் கிராமத்தில் குளத்துக்கு தண்ணீா் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், நாடியம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 110.34 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 110.34 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 326 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் ... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு!

கும்பகோணம் அருகே சனிக்கிழமை கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதி அம்மையப்பன் கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோவன். இவருக்கு சொந்தமான பசு ... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

தாராசுரத்தில் வெள்ளிக்கிழமை ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். கும்பகோணம் அருகே தாராசுரத்தைச் சோ்ந்தவா் முருகன் மனைவி ஆனந்தி (35). இவா் வெள்ளிக்கிழமை திருச்சியிலிருந்து மயிலாடுதுறை நோக... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த முடியும்! -அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தை வைத்துள்ள மத்திய அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக... மேலும் பார்க்க