ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
விசமங்கலத்தில் அடிப்படை வசதிகள்: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த விசமங்கலத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 434 மனுக்களை பெற்றுகொண்டாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விசமங்கலம் சப்பாணி வட்டம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் ஏராளமானோா் வசித்து வருகிறோம். இந்தநிலையில் கழிவுநீா் கால்வாய் வசதி, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
திருப்பத்தூா் திருமால்நகா் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனு: எங்கள் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் போதுமான கழிப்பறை வசதி இல்லை. இதனால் இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனா். எனவே கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
ஆம்பூா் அடுத்த கடாம்பூா் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 8, 9 வாா்டுகளில் சாலை வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே சாலை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரியிருந்தனா்.