அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; ...
ரயிலில் கடத்திய 29 கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற 29 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்துாா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையம் வழியாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் போதைப் பொருள் மற்றும் கஞ்சா கடத்தி வருவதாக தனிபிரிவு ரயில்வே போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விடிய விடிய ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை ஜாா்க்கண்ட் மாநிலம் அட்டியாவில் இருந்து பெங்களூா் வரை சென்ற அட்டியா விரைவு ரயில் ஜோலாா்பேட்டைக்கு வந்தது. அப்போது ரயிலின் முன் பகுதியில் உள்ள பொது பெட்டியில் ஆய்வு செய்தபோது, கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த 2 பைகளில் 16 பண்டல்களாக கட்டப்பட்டிருந்த 29 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.