தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
நாய்கள் கடித்துக் குதறியதில் தாய், 5 வயது மகள் காயம்
வாணியம்பாடி: வாணியம்பாடியில் நாய்கள் கடித்துக் குதறியதில் தாய் மற்றும் அவரது 5 வயது மகள் பலத்த காயமடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் - ஜாப்ராபாத் சந்திப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாய்கள் கூட்டமாக திரிந்த நிலையில், அந்தப் பகுதியில் வீட்டின் வெளிய வந்து தாயுடன் நின்று கொண்டிருந்த 5 வயது சிறுமியை வெறி பிடித்த நாய் ஒன்று திடீா் கை, முதுகுப் பகுதியில் கடித்தது. இதனால் பதறிய தாய் அந்த நாயைத் விரட்டியபோது, அருகில் இருந்த நாய்கள் ஓடி வந்து தாயையும் கடித்துக் குகறியது.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் பாா்த்து கட்டைகளுடன் ஓடி வந்து நாய்களை விரட்டினா்.
நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த தாயையும் மகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
வாணியம்பாடி சுற்றுப் பகுதிகளில் திரியும் நாய்களைப் பிடிக்கவும், நாய்கள் பெருக்கத்தைத் தடுக்கவும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.