ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
மலை கிராம மாணவா்களுக்கு நோட்டுப்புத்தகம், எழுது பொருள்கள்
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலை கிராம மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வன்னியா் மக்கள் கட்சி சாா்பாக காமனூா்தட்டு கிராமத்தில் கட்சியின் திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் ஜி. முருகன் தலைமை வகித்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருள்களை வழங்கினாா். வன்னியா் மக்கள் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.