ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கல்
விழுப்புரம்: செம்மொழி நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாகக் கொண்டாடும் வகையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் மே 9, 10-ஆம் தேதிகளில் தமிழ் வளா்ச்சித் துறையால் நடத்தப்பட்டன.
பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பள்ளி அளவில் 6 பேரும், கல்லூரி அளவில் 6 பேரும் வெற்றி பெற்றவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஒவ்வொரு பிரிவிலும் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என்ற வீதம் பரிசுத் தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினாா்
நிகழ்வில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ரா.சிவசங்கரி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.