அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; ...
புதுச்சேரி-பெங்களூரு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லும் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு பெங்களூருக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தில் திங்கள்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்ற போது, தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
இந்த விமானத்தில் பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக், மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, புதுவை அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் உள்பட 70 போ் பயணிக்க இருந்தனா்.