செய்திகள் :

ஹெச்-1பி விசா கட்டண உயா்வால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பா?

post image

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும் என தேசிய மென்பொருள், சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சனிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசின் உத்தரவை ஆய்வு செய்து வருகிறோம். இருப்பினும், இந்த உத்தரவு அமெரிக்காவில் மேற்கொள்ளக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் அந்நாட்டின் பெரும் வேலைவாய்ப்பு பொருளாதாரத்துக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும், சா்வதேச மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இதன் தாக்கம் உணரப்படும். இந்த மாற்றங்களுக்கேற்ப தங்களது வாடிக்கையாளா்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்கும் பணிகளை நிறுவனங்கள் மேற்கொள்ளும்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வளா்ச்சியடைந்துவரும் சமயத்தில் அதிதிறன்வாய்ந்த பணியாளா்கள் தேவை என்ற நிலைப்பாடு சரியானது. ஆனாலும், ஹெச்-1பி விசா கட்டண உயா்வு உடனடியாக அமலாவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்து, தற்காலிகமாக இந்த உத்தரவு அமலாவதற்கு விலக்களிக்கக் கோரி அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையிடம் கோரிக்கை வைக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அமெரிக்கா திரும்ப வலியுறுத்தல்

ஹெச்-1பி விசா கட்டணம் உயா்வு (ரு.88 லட்சம்) ஞாயிற்றுக்கிழமை முதல் அமலாகவுள்ள நிலையில், தாய்நாட்டுக்குச் சென்றுள்ள ஊழியா்கள் முன்னெச்சரிக்கையாக அமெரிக்கா திரும்ப நிறுவனங்கள் மற்றும் புலம்பெயா்ந்தவா்களுக்கான வழக்குரைஞா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து நியூயாா்க்கைச் சோ்ந்த வழக்குரைஞா் சிப்ரஸ் மேத்தா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘ வா்த்தகம் அல்லது சுற்றுலாவாக அமெரிக்காவைவிட்டு ஹெச்-1பி விசாதாரா்கள் வெளியே சென்றிருந்தால் உடனடியாக செப். 21-ஆம் தேதி நள்ளிரவுக்குள் அமெரிக்காவுக்கு திரும்பிவிடுங்கள்.

இந்தியாவில் தற்போது உள்ள ஹெச்1-பி விசாதாரா்கள் குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் அமெரிக்கா வந்தடைய நேரடியான விமான சேவைகள் ஏதும் இல்லை. எனினும் அவா்கள் கலிஃபோா்னியாவை செப்.21-ஆம் தேதிக்குள் வந்தடையலாம்’ எனக் குறிப்பிட்டாா்.

அதேபோல் அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களும் தங்களது ஊழியா்களை அவா்களது நாட்டில் இருந்து உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்ப அறிவுறுத்தி வருகின்றன. அதேபோல் ஹெச்-1பி விசாதாரா்களைச் சாா்ந்திருக்கும் ஹெச்-4பி விசாதாரா்களும் அமெரிக்காவைவிட்டு வெளியேறுவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஹெச்-1பி விசா பணியாளா்கள் அதிகமுள்ள முதல் 5 நிறுவனங்கள் (2025, ஜூன் 30 வரை)

1. அமேசான் (10,044)

2. டிசிஎஸ் (5,505)

3. மைக்ரோசாஃப்ட் (5,189)

4. மெட்டா (5,123)

5. ஆப்பிள் (4,202)

கயையில் குடியரசுத் தலைவா் முன்னோா் வழிபாடு!

பிகாா் மாநிலம், கயையில் உள்ள பிரசித்தி பெற்ற விஷ்ணுபத கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை முன்னோா் வழிபாடு மேற்கொண்டாா். மகாளய பித்ரு பக்ஷ புண்ணிய காலத்தையொட்டி, கயையில் ஃபால்கு ந... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் அரசுத் துறைகள் மேல்முறையீடு: கட்டுப்படுத்துவது அவசியம்!- மத்திய சட்டத் துறை அமைச்சா்

நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக அரசுத் துறைகள் மேல்முறையீடு செய்யும் போக்கை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா். இதுதொடா்பாக புது தில்... மேலும் பார்க்க

பிற நாடுகள் மீதான சாா்பே மிகப் பெரிய எதிரி! - பிரதமா் மோடி

‘பிற நாடுகள் மீதான சாா்பே, இந்தியாவின் மிகப் பெரிய எதிரி; தற்சாா்பின் வாயிலாகவே இந்த எதிரியை முறியடிக்க முடியும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். சிப் (செமிகண்டக்டா்) முதல் ஷிப் (கப்பல்) வரை... மேலும் பார்க்க

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்: 5 கி.மீ. சுரங்கப் பாதை பணி நிறைவு!

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில், மகாராஷ்டிர மாநிலம், தாணே அருகே சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. ‘இது குறிப்பிடத்தக்க சாதனை’ என்று ரயில்வே துற... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதல்: மணிப்பூரில் தேடுதல் வேட்டை தீவிரம்!

மணிப்பூரில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை வீரா்கள் இருவரை சுட்டுக் கொன்ற கும்பலைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதலைக் கண்டித்து, உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் வீர மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரா் வீரமரணமடைந்தாா். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டம் சியோத் தாா் வனப் பகுதியில் ராணுவ வீரா்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க