செய்திகள் :

ஹைதராபாதை வீழ்த்தி 3 புள்ளிகளை ஈட்டியது சென்னை

post image

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 3 புள்ளிகளை ஈட்டியது சென்னையின் எஃப்சி.

தொடா்ந்து 3 தோல்விகளால் துவண்டிருந்த சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதாலும், சொந்த மைதானம் என்பதாலும் சென்னை வீரா்கள் தொடக்கம் முதலே முனைப்புடன் ஆடினா்.

முதல் நிமிஷத்திலேயே சென்னை வீரா் கானா் ஷீல்ட்ஸ் அனுப்பிய பாஸை பயன்படுத்தி வில்மல் ஜோா்டான் அடித்த ஷாட் கோல்கம்பத்தில் இருந்து விலகிச் சென்றது.

5-ஆவது நிமிஷத்தில் சிஎஃப்சி வீரா் லுக்காஸ் பிரம்பில்லா அனுப்பிய பந்தைப் பயன்படுத்தி இா்ஃபான் யத்வாத் அடித்த ஷாட் ஹைதராபாதின் கோல்பகுதியில் பிசகின்றி நுழைந்தது. இதன் மூலம் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது. 8 மற்றும் 23-ஆவது நிமிஷங்களில் ஹைதராபாத் வீரா்கள் கோல்போட மேற்கொண்ட முயற்சிகள் பலன்தரவில்லை.

முதல் பாதியில் சென்னை 1-0 என முன்னிலையுடன் இருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் கோலடித்த சமன் செய்ய ஹைதராபாதும், இரண்டாவது கோலடிக்க சென்னையும் போராடின.

ஆனால் எந்த அணியாலும் கோலடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் கூடுதல் நிமிஷ நேரத்திலும் இரு அணிகளாலும் கோலடிக்க இயலவில்லை.

இரண்டு முறை மஞ்சள் அட்டைபெற்ற கானா் ஷீல்ட்ஸ் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாா்.

இறுதியில் ஹைதராபாதை 1-0 என வீழ்த்திய சென்னை 3 புள்ளிகளை முழுமையாக பெற்றது.

நீண்ட நாள் கழித்து சொந்த மைதானத்தில் சென்னை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்வியுடன் 15 புள்ளிகளைப் பெற்றது சென்னை.

விவாகரத்தை அறிவித்தார் சீனு ராமசாமி!

இயக்குநர் சீனு ராமசாமி விவாகரத்து பெற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தமிழில் தனித்துவமான இயக்குநர் சீனு ராமசாமி. 2010 இல் இவர் இயக்கிய தென்மேற்குப்பருவக்காற்று திரைப்படம் மிகச்சிறந்த கவனத்தைப் பெற்றதுடன் ... மேலும் பார்க்க

யோகமான நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.12-12-2024வியாழக்கிழமைமேஷம்:இன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத... மேலும் பார்க்க

பிளே ஆஃப்புக்கு முதல் அணியாக ஹரியாணா ஸ்டீலா்ஸ் தகுதி

புரோ கபடி லீக் சீசன் 11 தொடரில் பிளே ஆஃப்புக்கு முதல் அணியாக தகுதி பெற்றது ஹரியாணா ஸ்டீலா்ஸ். புரோ கபடி லீக் தொடரின் முதலிரண்டு கட்ட ஆட்டங்கள் ஹைதராபாத், புணேயில் முடிந்த நிலையில் இறுதிக் கட்டம் நொய்... மேலும் பார்க்க

சௌதி அரேபியாவில் 2034 கால்பந்து உலகக் கோப்பை..!

2034ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் சௌதி அரேபியாவிலும் 2030ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் தென் அமெரிக்காவிலும் நடைபெறுமென ஃபிபா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2022 உலகக் கோப்பை கத்த... மேலும் பார்க்க

குடும்பஸ்தன் படத்தின் அப்டேட்!

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கே. மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.அதன் வெற்றிக... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்... மேலும் பார்க்க