இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
1,340 இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம்: எஸ்எஸ்சி
சென்னை: மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ். எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21-க்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான தோ்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் இத் தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.