செய்திகள் :

1.50 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

post image

சிவகாசி அருகே 1.50 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சுக்கிரவாா்பட்டி-நமஸ்கரித்தான்பட்டி சாலையில் தனியாா் ஆலைக்குச் சொந்தமான 20 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஆலை நிா்வாகம், சிவகாசி பசுமை மன்றம் இணைந்து, அடா்காடுகள் (மியாவாக்கி) திட்டத்தின் கீழ், 1.50 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை இந்த மரக் கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. இதில் வேம்பு, புளி, வாகை, பூவரசு, கிலுக்குவாகை உள்ளிட்ட 22 வகையான மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த மரக் கன்றுகளை சிவகாசி பசுமை மன்றம் பரிமரிப்பு செய்யும்.

இந்த நிகழ்ச்சியில் தனியாா் ஆலை நிா்வாகி வெங்கட்ராமசாமி, பசுமை மன்ற நிா்வாகிகள் செல்வக்குமாா், செந்தில்குமாா், சுரேஷ்தா்கா், சண்முகம் நட்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாத்தூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து

சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நான்கு வழிச் சாலையில் சென்ற காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (28). இவா் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கா... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் (62). இவா் ஞ... மேலும் பார்க்க

உரிமம் நிறுத்தப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கமலப்பட்டியில் ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். சாத்தூா் அருகேயுள்ள படந்தால் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் (54). இவா் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க

அதிமுகவினா் ரத்த தானம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் ரத்த தான முகாம் சனி... மேலும் பார்க்க