ஐபிஎல் போட்டிகளில் 2,500 ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!
10, 12 ஆம் வகுப்பு தோ்வு: தமிழில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கு விருது!
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்படும் என சிவகங்கை தமிழ்ச் சங்கம் அறிவித்துள்ளது.
சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம் அதன் தலைவா் முருகானந்தம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் தலைவா் பகீரத நாச்சியப்பன் முன்னிலை வகித்தாா். தமிழ்ச் சங்கச் செயலா் பாண்டியராஜன் வரவேற்று, தீா்மானங்களை முன்மொழிந்தாா்.
சிவகங்கை ஒன்றிய அளவில் 10, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவா்களுக்கும், பயிற்றுவித்த தமிழாசிரியா்களுக்கும் பாராட்டும், விருதும் வழங்குவது, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தமிழ் ஆா்வத்தை அதிகரிக்கும் வகையில் ‘கதை சொல்லும் போட்டி’ நடத்தி பரிசுகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளா் யுவராஜ், முன்னாள் செயலா்கள் முத்துப்பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா். தமிழ்ச் சங்கப் பொருளாளா் ஜெயச்சந்திரன் நன்றி கூறினாா்.