செய்திகள் :

100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார் நல்லகண்ணு: முதல்வர் ஸ்டாலின்

post image

100 வயதை கடந்தும் நல்லகண்ணு அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் ‘நூறு கவிஞர்கள் - நூறு கவிதைகள்' என்ற கவிதை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுகிழமை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது, நல்லகண்ணுவிற்கு கம்பீரம் மற்றும் செவ்வணக்கத்தை தெரிவிக்கிறேன். நான் இங்கு வாழ்த்த வரவில்லை. வாழ்த்து பெற வந்துள்ளேன்.

100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். அகத்தில் இருக்கும் கண் நல்லகண்ணு என கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டார். தோழர் நல்லகண்ணுவின் வாழ்த்தை விட ஊக்கம் எதுவும் இல்லை; கலைஞர் இவருக்கு அம்பேத்கர் விருது வழங்கினார். நான் இவருக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கினேன்.

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனையில் கரைப்பு!

பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. பொதுவுடைமை, திராவிடம், தமிழ்த் தேசிய இயக்கம் ஒன்றாக இணைந்து விழா. இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல் வாழ்ந்து வருகிறார் நல்லகண்ணு. உழைப்பால் கிடைத்த பணத்தையெல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார்.

அம்பேத்கர், தகைசால் தமிழர் விருது பரிசுத் தொகையை கூட தமிழக அரசுக்கு திருப்பி அளித்தார். உயர் நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு. கம்யூனிஸ்ட் உடனான நட்பு தேர்தல் அரசியலைத் தாண்டிய கொள்கை நட்பு. திமுக உருவாகவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்திருப்பேன் என்று கருணாநிதி கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

கரும்பு கொள்முதல்: முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை அழைப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்புகள் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை ... மேலும் பார்க்க

நீலகிரியில் உறை பனி வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.4) இரவு நேரங்களில் உறை பனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு வட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெ... மேலும் பார்க்க

காட்பாடி மெமு ரயில் ரத்து

காட்பாடி - ஜோலாா்பேட்டை இடையே இயங்கும் மெமு ரயில் (எண்: 06417/06418) ஜன. 6, 8, 10, 13, 20, 22, 24, 27, 29, 31 ஆகிய தேதிகளில் இரு மாா்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவ... மேலும் பார்க்க

போராட்டங்களுக்கு அனுமதி: தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் வேண்டுகோள்

தொழிலாளா் நலச் சட்டங்களுக்கு முன்னுரிமை, போராட்டங்களுக்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் தலைவா்கள் விடுத்தனா். விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில... மேலும் பார்க்க

நாளை மாரத்தான் ஓட்டம்: தென் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) நடைபெறவுள்ளதையொட்டி, தென் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் 11 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை... மேலும் பார்க்க