செய்திகள் :

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த கோல்டன் ஸ்பேரோ!

post image

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இதில், தனுஷ் சகோதரியின் மகன் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், மாத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடலான, ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடனமாடியிருந்தார்.

இதையும் படிக்க: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு?

ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் அறிவு வரிகளில் தனுஷ், ஜி.வி. பிரகாஷ், அறிவு மற்றும் சுப்லாஷ்லினி உள்ளிட்டோர் பாடிய இப்பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இன்ஸ்டாகிராமில் பலரும் மடிசார் புடவையில் ரீல்ஸ் செய்து வைரலாக்கினர்.

தற்போது, இப்பாடல் யூடியூபில் 10 கோடி (100 மில்லியன்) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

பிக் பாஸ் விளையாட்டைக் கெடுப்பவர் முத்துக்குமரன்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் விளையாட்டைக் கெடுக்கும் வகையிலான வேலைகளில் முத்துக்குமரன் ஈடுபடுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் தொழிலாளர... மேலும் பார்க்க

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ!

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே மூலம் முன்னணி நாயகனாகவும் கவனம் ஈர்த்துள்... மேலும் பார்க்க

மெஸ்ஸிக்கு அடுத்து எம்பாப்பே புதிய சாதனை..! ரியல் மாட்ரிட் வெற்றி!

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிளியன் எம்பாப்பே 50 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சாம்பியன் லீக்கில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிவரும் கிளியன் எம்பாப்பே சில மாதங்... மேலும் பார்க்க

பிக் பாஸ் வீட்டில் முதல்முறையாக அழுத தீபக்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் தீபக், தனது தவறை உணர்ந்து முதல்முறையாக கண்ணீர் விட்டு அழுதார். அருண் பிரசாத் முன்பு தீபக் அழுத விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் சீசன் 8 ந... மேலும் பார்க்க

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு?

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல... மேலும் பார்க்க

மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம்!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவன... மேலும் பார்க்க