டிஜிட்டல் கைது: எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளரிடம் ரூ. 71 லட்சம் மோசடி!
12 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
திருப்பூரில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.
திருப்பூா், வெள்ளியங்காடு பகுதியில் வீட்டில் கஞ்சா வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்தில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், 12 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (39), திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சோ்ந்த பாண்டி (53) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில், வெள்ளியங்காடு கே.எம்.நகரில் தங்கி ராஜமாணிக்கம் பின்னலாடை வியாபாரம் செய்து வந்ததும், கா்நாடகத்துக்குச் சென்று கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்து விற்பனையில் ஈடுபட்டதும், இதற்கு தரகராக பாண்டி செயல்பட்டதும் தெரியவந்தது.