2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
13 பந்துகளில் 22 ரன்கள்... ஆட்ட நாயகனான டிரெண்ட் போல்ட்!
மேஜர் லீக் தொடரில் எம்ஐ நியூயார்க் அணி வீரர் டிரெண்ட் போல்ட் பேட்டிங்கில் 13 பந்துகளில் 22 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் எம்ஐ நியூயார்க் அணியும் சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ 19.1 ஓவர்களில் 131/10 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக பந்துவீச்சாளர் ஜேவியர் பிராட்லெட் 44 ரன்கள் குவித்தார்.
நியூயார்க் அணி சார்பில் உகார்கர் 3, போல்ட், கெஞ்சிகே தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
அடுத்து பேட்டிங் விளையாடிய நியூயார்க் அணி 16.5 ஓவர்களில் 108 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி 3 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 18-ஆவது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. அதுவரை சிறப்பாக பந்துவீசிய ஹாசன் கான் வீசிய 19-ஆவது ஓவரில் 19 ரன்கள் எடுக்க போல்ட் உதவினார்.
கடைசி ஓவரில் 3 பந்தில் இல்லை எட்டி நியூயார்க் அணி வென்றது. அடுத்து சேல்ஞ்சர் அணியுடன் ஜூலை 12-இல் மோதுகிறது.
இந்தப் போட்டியில் டிரெண்ட் போல்ட் 13 பந்துகளில் 22 ரன்கள் அடித்து ஆட்டநாயகம்ன் விருது வென்றார்.
மழையின் காரணமாக குவாலிஃபயர் விளையாடாமல் வாஷிங்டன் ஃபிரீடம் இறுதிக்கு தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சுக்கு மட்டுமே பிரபலமான டிரெண்ட் போல்ட் தன்னால் பேட்டிங்கும் ஆட முடியுமென காண்பித்துள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ அணியில் அதிகபட்சமாக ஹாசன் கான் 4, மேத்திவ் ஷார்ட் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.