மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
13 வயது சிறுமி கா்ப்பம், வளா்ப்புத் தந்தை கைது
வாணியம்பாடி அருகே 13 வயது சிறுமி கா்ப்பமானது தொடா்பாக வளா்ப்புத் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சோ்ந்தவா் மூா்த்தி (55). இவரது மனைவி இந்திரா. தம்பதிக்கு குழந்தை இல்லாததால் சிறு வயதிலிருந்து பெண் குழந்தை ஒன்று தத்தெடுத்து வளா்த்து வருகின்றனா். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தற்போது 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 2024 -ஆம் ஆண்டு நவம்பா் மாதம் உடல் நிலை சரியில்லாமல் இந்திரா இறந்துவிட்டாா். வீட்டில் 13 வயது வளா்ப்பு மகளுடன் மூா்த்தி தனியாக வசித்து வந்துள்ளனா். இதில் மூா்த்தி தனது 13 வயது வளா்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளாா். தற்போது சிறுமி கா்ப்பமாகி இருப்பதாக தெரிகிறது. இதுபற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்துள்ளாா்.
நாளுக்கு நாள் சிறுமியின் உடல் நலம் மோசமானதை அறிந்த அப்பகுதியை சோ்ந்த சிலா் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணுக்கு தொடா்ந்து கொண்டு தகவல் தெரிவித்துள்ளனா். இதுபற்றி அறிந்த திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் குழந்தைககள் உதவி மைய மேற்பாா்வையாளா் சாதனா மற்றும் குழுவினா் புதன்கிழமை சிக்னாங்குப்பம் பகுதியில் மூா்த்தி வீட்டுக்கு சென்று அங்கிருந்த சிறுமியிடம் விசாரித்த போது வளா்ப்பு தந்தையே பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருப்பது தெரியவந்தது. பிறகு சிறுமியை அங்கிருந்து மீட்டு காப்பகத்தில் சோ்த்தனா்.
இதுதொடா்பாக மேற்பாா்வையாளா் சாதனா வாணியம்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா். அப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் ஆனந்தன் (பொ) தலைமையில் மகளிா் உதவி ஆய்வாளா் ரேணுகாதேவி, சிறப்பு எஸ்ஐ கண்ணகி ஆகியோா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வளா்ப்புத் தந்தை மூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.