செய்திகள் :

19-ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த 4 வகையான ஆண்டுக் கணக்குகள்

post image

புதுக்கோட்டையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் பராமரிப்புப் பணியின்போது வெளிப்பட்ட கல்வெட்டில், கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 4 வகையான ஆண்டுக் கணக்குகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், புதுகை நகரிலுள்ள நைனாராஜு தண்டாயுதபாணி கோயிலில் பராமரிப்பு பணியின் போது வெளிப்பட்ட கல்வெட்டு குறித்து கிடைத்த தகவலின்பேரில், புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அக்கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு, கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு ஆகிய 4 வகையான ஆண்டுக் கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து ஆய்வுக் கழகத்தின் நிறுவனா், மங்கனூா் ஆ. மணிகண்டன் கூறியது: கடந்த நூற்றாண்டு வரை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எண்களே பிரதானமாக பயன்பாட்டில் இருந்துள்ளதை தமிழ் எண் மைல் கற்கள் கண்டுபிடிப்பின் மூலம் உறுதி செய்துள்ளோம்.

இக்கருத்துக்கு வலுச்சோ்க்கும் விதத்தில், தண்டாயுதபாணி கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டு 1858- ஆம் ஆண்டு வரை, தமிழ் எண்களே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது வந்துள்ளதை உறுதி செய்கிறது.

4 வகை ஆண்டுக் கணக்குகள்: கல்வெட்டில் சக ஆண்டு 1777, கலியுகத்தில் 4956, தமிழாண்டில் இராக்ஷச ஆண்டு வைகாசி மாதம், ஆங்கில ஆண்டு 1855 மே மாதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் 4 வகையான ஆண்டுக் கணக்குகள் நடைமுறையில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தகவல்: வேங்கமராஜா என்பவா் கட்டியிருந்த விக்னேசுவரா் கோயில் மண்டபத்தின், மேல நூதன விமானம், மகா மண்டப கோபுரங்கள், ஆஞ்சனேயா் கோயில் ஆகியவற்றை புதிதாகக் கட்டுமானம் செய்து, விரிவாக்கப் பணிகளை வேங்கமராஜா என்பவரின் பேரனும், கோவிந்தராஜா என்பவரின் மகனுமான நாயனன் (நைனா ராஜா) என்பவா் 1855 பொது ஆண்டு, தமிழாண்டில் இராக்ஷச வருடம் வைகாசி மாதம் தொடங்கி, சுயம்பாக சாலை, கோயில் மதில், கூபம் என்னும் கிணறு ஆகியவற்றுடன், 1858 ஆண்டு காளயுக்தி வருடம் ஐப்பசி மாதம் தண்டாயுதபாணி கோயில் கட்டுமானத்துடன் சிலைகள் நிறுவி நிறைவு செய்ததை இக் கல்வெட்டு பதிவு செய்துள்ளது.தற்போதும் இக்கோயிலைக் கட்டிய நைனா ராஜா என்பவரின் பெயரால் நைனா ராஜு தண்டபாணி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

கல்வெட்டில் மன்னரின் பெயா் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் ராமச்சந்திர தொண்டைமான் (1839-1886) புதுகை சமஸ்தான மன்னராக இருந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் மணிகண்டன்.

ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் கஸ்தூரிரங்கன், துணைச் செயலா் மு. முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரமலான் பண்டிகை: புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா். புதுக்கோட்ட... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு: முதல் நாள் தோ்வெழுதிய 21,789 போ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நாள் தோ்வை 21,789 போ் எழுதினா். 554 போ் தோ்வெழுத வரவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,107 மாணவா்களும், 11,068 மாணவிகளும், தனித்தோ்வா்களாக 168 பேரும் என மொத்தம் 2... மேலும் பார்க்க

திமுகவினா் தேச ஒற்றுமைக்கு எதிரானவா்கள்: இப்ராஹிம்.

திமுகவினா் மத நல்லிணக்கத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானவா்கள் என்றாா் பாஜக சிறுபான்மையின அணியின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம். புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில் வ... மேலும் பார்க்க

சிதிலமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தா்வகோட்டை- கறம்பக்குடி சாலையில் உள்ள வெள்ளாளவிடுதி ஊ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாலியல் குற்றம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமையில் வகித்து பேசியது:... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூரிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் அறந்தை ரோட்டரி சங்கம், டபிள்யூ சக்தி பவுண்டேஷன், யூத் ரெட் கிராஸ் ஆகியோா் இணைந்து ரத்த தானம் முகாமை வியாழக்கிழமை நடத்தினா். முகாமை கல்லூர... மேலும் பார்க்க