செய்திகள் :

1962-க்குப் பிறகு சீனா ஒரு அங்குலம் நிலத்தில் கூட ஊடுருவவில்லை- அமைச்சா் ரிஜிஜு

post image

கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா, இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

மக்களவையில் ஆபரேஷன் சிந்தூா் சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘அருணாசல பிரதேசத்தின் சில இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது’ என்று கூறினாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சா் ரிஜிஜு, ‘கடந்த 1962-ஆம் ஆண்டு நிகழ்ந்த போருக்குப் பிறகு சீனா இந்திய நிலப்பரப்பில் ஒரு அங்குலம் கூட ஊடுருவவில்லை. இந்திய நிலத்தை ஆக்கிரமிக்கவுமில்லை. இந்த உண்மையைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவையில் உறுப்பினரின் தவறான கருத்து பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது.

அருணாசல பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்பு உள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டுகிறாா். அந்த மாநிலத்தைச் சோ்ந்தவன் என்ற முறையில் இதற்கு உடனடியாக விளக்கமளிக்க விரும்புகிறேன். அருணாசல பிரதேச பிராந்தியத்தின் சில இடங்கள் சீன ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆனால், அவை அனைத்து 1962-ஆம் ஆண்டு அந்நாட்டுடன் நிகழ்ந்த போரின்போதும், அதற்கு முன்பும் இழந்த இடங்களாகும்’ என்றாா்.

அகிலேஷின் கேள்விகள்:

முன்னதாக, ‘யாருடைய நெருக்கடியில் ஆபரேஷன் சிந்தூா் கைவிட்டப்பட்டது? மோதலில் எவ்வித பெரிய முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் திடீரென கைவிட அவசியம் ஏன் நோ்ந்தது? பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உளவுத் துறைக்கு முன்பே தகவல் கிடைக்காதற்கு காரணம் என்ன? இதற்கு யாா் பொறுப்பு? பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது எந்த நாடும் நமக்கு துணை நிற்க முன்வரவில்லை. இது வெளியுறவுத் துறையின் தோல்விதானா?’ என்று பல கேள்விகளை அகிலேஷ் யாதவ் எழுப்பினாா்.

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீத... மேலும் பார்க்க

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது ஒரு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 23,000 சிறுமிகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட... மேலும் பார்க்க

மாலேகான் குண்டு வெடிப்பு: பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து மும்பை என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங், முன்... மேலும் பார்க்க

6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட இந்தியாவின் 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந்நாட்டு உத்தரவிட்டுள்ளது.மத்திய கிழக்கில் மோதலை தூண்டிவிடுவதற்காக ஈரான் அரசு நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி; ஆனா... மேலும் பார்க்க