செய்திகள் :

2 நாள்களில் 2 முறை சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயற்சி! 2 பேர் கைது!

post image

மும்பையிலுள்ள பிரபல் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில் இரண்டு வெவ்வேறு முறை அத்துமீறி நுழைய முயன்ற 2 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை பாந்திரா காவல் நிலையத்தில், பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இல்லத்தில், கடந்த மே 20 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அத்துமீறி நுழைய முயன்றதாக இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கு பாந்திரா பகுதியிலுள்ள கேலக்ஸி அபார்ட்மண்ட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தினுள், சல்மான் கானுக்குச் சொந்தமான வீடொன்று உள்ளது. அங்குதான், அவர் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே 20 ஆம் தேதியன்று காலை, ஜித்தேந்திரா குமார் சிங் (வயது 23) என்ற நபர், சல்மான் கானின் வீட்டைச் சுற்றி வந்துள்ளார்.

அப்போது, அங்கு சல்மான் கானின் பாதுகாப்பிறகாகப் பணியமர்த்தப்பட்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் ஜித்தேந்திராவை அங்கிருந்து கிளம்பச் சொல்லியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் தனது செல்போனை கீழே வீசி உடைத்துள்ளார்.

பின்னர், அன்று மாலை அவர், அதே கட்டடத்தில் வசிக்கும் மற்றொரு நபருக்குச் சொந்தமான வாகனத்தின் மூலம் உள்ளே நுழைய முயன்றபோது, போலீஸாரிடம் சிக்கியுள்ளார். இதனால், அவரை உடனடியாக பாந்திரா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், சல்மான் கானை பார்க்கவே அவர் அவ்வாறு நுழைந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், அவர் எப்படி அந்த வாகனத்தினுள் ஏறினார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதேபோல், கடந்த மே 21 ஆம் தேதியன்று, மற்றொரு பெண் உரிய அனுமதியின்றி அந்தக் கட்டடத்தினுள் நுழைந்து, சல்மான் கானின் வீட்டின் வாசல் வரைச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஜித்தேந்திரா மற்றும் பெயர் குறிப்பிடப்படாத அப்பெண் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: சண்டையை நிறுத்தியது யார்? அமெரிக்காவா? ஜெய்சங்கர் அதிரடி விளக்கம்!

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க