கரைச்சுத்துபுதூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் நடத்த வேண்டும்: விசிக
2-வது டெஸ்ட்: இருவர் சதம் விளாசல்; வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா!
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் இன்று (ஜனவரி 3) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் சாம்பியன்ஸ் டிராபியுடன் முடிவுக்கு வருகிறதா?
ரியான் ரிக்கல்டான், டெம்பா பவுமா சதம் விளாசல்
தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டான் களமிறங்கினர். மார்க்ரம் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, வியான் முல்டர் 5 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ரியான் ரிக்கல்டான் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர். கேப்டன் டெம்பா பவுமா 179 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடி வரும் ரியான் ரிக்கல்டான் 232 பந்துகளில் 176 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவருடன் டேவிட் பெடிங்ஹம் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம்: ஆஸி. முன்னாள் கேப்டன்
முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.