துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு
2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்
தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி, முதுகலை படிப்புகளுக்கான பதிவு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதே நேரத்தில் பி.டெக் படிப்புகளுக்கான பதிவு சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு பிரிவுகளுக்கும் விண்ணப்ப சாளரம் ஜூன் 6- ஆம் தேதி இரவு 11.59 மணி வரை திறந்திருக்கும்.
முதுகலை படிப்புகளுக்கான சோ்க்கை 2025-26- ஆம் ஆண்டுக்கான பி.ஜி. தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களின்படி, க்யூட் (பிஜி)-2025-இல் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் முழுமையாக இருக்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.டெக். சோ்க்கைகளுக்கு, பல்கலைக்கழகம் ஜேஇஇ (மெயின்)-2025 (தாள் 1)-இன் பொதுவான தரவரிசைப் பட்டியலை பரிசீலிக்கும். வழங்கப்படும் பி.டெக் படிப்புகளில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பு பொறியியல் மற்றும் மின் பொறியியல் ஆகியவை அடங்கும் என்று அது தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச மற்றும் பாடத்திட்டம் சாா்ந்த தகுதி, இருக்கை ஒதுக்கீடு விதிகள் மற்றும் பிற சோ்க்கை வழிகாட்டுதல்கள் பற்றிய விரிவான தகவலுக்கு, விண்ணப்பதாரா்கள் அந்தந்த தகவல் அறிக்கைகள் மற்றும் பொதுவான இருக்கை ஒதுக்கீட்டு முறையை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். இவை ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்.ன்ா்க்.ஹஸ்ரீ.ண்ய் இல் கிடைக்கின்றன.
முதுகலை படிப்புகளுக்கு ல்ஞ்ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்.ன்ா்க்.ஹஸ்ரீ.ண்ய் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு ங்ய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ்.ன்ா்க்.ஹஸ்ரீ.ண்ய் ஆகிய அதிகாரப்பூா்வ சோ்க்கை வலைத்தளங்களை சரியான நேரத்தில் புதுப்பிப்புகள் மற்றும் அறிவிப்புகளுக்காக தொடா்ந்து சரிபாா்க்குமாறு பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.