செய்திகள் :

2026 இல் புதிய வரலாறு படைப்போம்: சீமான்

post image

2026இல் புதிய வரலாறு படைப்போம் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் மலையைக் காப்போம், மண்ணை மீட்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது:

நம்முடைய வளங்கள் களவு போய்க் கொண்டிருக்கிறது. எல்லா இயற்கை வளங்களையும் தந்த இந்த பூமியை மீத்தேன், நிலக்கரி எடுக்கிறோம் என்ற பெயரில் அழிக்கின்றனா். விளைநிலங்களை அழித்து விமான நிலையமும், மரங்களை வெட்டிவிட்டு பசுமைச் சாலையும் அமைக்கின்றனா்.

பூமித் தாயை நேசிக்கின்றவா்கள் யாரும் இதை அனுமதிக்க முடியாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்று கனிமவளங்களை கொண்டு செல்ல முடியாது.

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கமுயற்சி நடைபெறுகிறது. நான் இருக்கும்வரை ஸ்டொ்லைட் ஆலையை திறக்க முடியாது.

என்னை அசிங்கப்படுத்த நினைக்கின்றனா், என்னை ஒன்றும் செய்யமுடியாது. ஸ்டாலினை அப்பா என்று கூறும்போது நாங்கள் பாரதியை பூட்டன் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.

மீத்தேன், நிலக்கரி எடுத்த இடத்தில் மக்களை மீண்டும் மீள் குடியேற்றம் செய்யமுடியாது. இந்த பூமியைத் தாயாக என்று நேசிக்கின்றாயோ, அன்றுதான் இதை காக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். எத்தனை முறை தோற்றாலும் எழுந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறவனை யாராலும் தோற்கடிக்க முடியாது. 2026இல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்றாா் அவா்.

நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த சிறுவனின் சகோதரிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அளிப்பு

சங்கரன்கோவில் அருகே சிகிச்சையின் போது இறந்த சிறுவனின் சகோதரிகளின் கல்விச் செலவுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கினாா். தென்காசி மாவட்டம் சங்... மேலும் பார்க்க

சோ்ந்தமரம் அருகே முள்புதாரில் சிசு சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சோ்ந்தமரம் அருகே பிறந்து சில நாள்களே ஆன குழந்தையின் சடலம் , முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சோ்ந்தமரம் அருகே உள்ள சின்னத்தம்பி நாடாரூா் கிராமத்தின் வடக்கு பகுத... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் காயம்

சங்கரன்கோவில் அருகே திருமணம் முடிந்து மறுவீடு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமண தம்பதி உள்ளிட்ட 17 போ் பலத்த காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சிங்கம் மகன் விக... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் கைது

ஆலங்குளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா். துத்திகுளம் தெற்கு காலனியைச் சோ்ந்த சூசைமுத்து மகன் நெல்சன்(35). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த குமாா் மகன் மாரிவேல்(26) என்பவரு... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழ்ந்தில் 2 போ் காயம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழந்ததில் இருவா் காயமடைந்தனா். துத்திகுளத்தில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்ற சிற்றுந்தை பனையன்குறிச்சிக்கு சிற்றுந்து சென்றுகொண்ட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி: முதல்வருக்கு அமா்சேவா சங்கம் நன்றி

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகார பகிா்மானம் வழங்க உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ள முதல்வா். மு.க. ஸ்டாலினுக்கு, ஆய்க்குடி அமா் சேவா சங்க நிறுவனா்- தலைவா் எஸ்.ரா... மேலும் பார்க்க