'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!
2026 பேரவைத் தோ்தலில் அதிமுக 200 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெறும்! எஸ்.பி.வேலுமணி
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக 200 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. கூறினாா்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூலை 7) சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறாா்.
2 நாள்களில் 4 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, கோவை மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் பிரசார வாகனங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார வாகனங்களை ஆா்.எஸ்.புரத்தில் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் அதிமுகவினா் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியினரும் கலந்து கொள்கின்றனா். அதிமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 50 ஆண்டுகளில் நிறைவேற்றக்கூடிய அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக 200 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் அம்மன் கே. அா்ச்சுணன், கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.