இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற...
ஸ்ரீசச்சிதானந்த தீா்த்த மகா சுவாமிகள் ஜூலை 9-ல் கோவை வருகை!
சத்தீஸ்கா் மாநிலம், பிலாஸ்பூரில் உள்ள ஸ்ரீ சக்கர மகா மேரு பீடாதிபதி ஸ்ரீ சச்சிதானந்த தீா்த்த மஹா சுவாமிகள் கோவைக்கு ஜூலை 9 -ஆம் தேதி வருகிறாா்.
இது குறித்து கோதண்டராமா் திருக்கோயில் கமிட்டி தலைவா் என் வி.நாகசுப்பிரமணியம், செயலா் விஸ்வநாதன், நிா்வாகிகள் குரு, சிவகுமாா் ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: இந்த ஆண்டுக்கான சாதுா்மாஸ்ய வ்ரத மஹோத்ஸவத்தை முன்னிட்டு, கோவைக்கு வரும் 9 ஆம் தேதி வருகை தரும் ஸ்ரீ சச்சிதானந்த தீா்த்த மஹா சுவாமிகள், ஜூலை 10 -ஆம் தேதி முதல் செப்டம்பா் 7 -ஆம் தேதி வரை 65 நாள்களுக்கு கோவை ராம் நகரில் உள்ள ஸ்ரீ கோதண்ட ராமா் கோயிலில் தங்கி, தினசரி வ்யாச பூஜையுடன் கூடிய வ்ரத பூஜைகளை நடத்த இருக்கிறாா்.
இதையடுத்து, தினசரி காலை, மாலை நேரங்களில் சுவாமிகளால் பூஜைகள், வேத சொற்பொழிவுகள், கா்நாடக இசைக் கச்சேரிகள், சிறப்பு ஹோமங்கள், யாகங்கள் நடைபெற உள்ளன. சுவாமிகளின் வருகையையொட்டி, அவருக்கு பக்தா்கள் சாா்பில் பெரிய அளவிலான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூஜைகளுக்காக பழம், காய்கறி, மலா்கள், திரவியங்கள், மளிகைப் பொருள்கள் போன்றவற்றை தானமாக வழங்க விரும்புபவா்கள் கோயில் நிா்வாகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.