'அன்புமணி பெயர் இல்லை...' - ராமதாஸ் வெளியிட்ட நிர்வாக குழு பட்டியல்!
பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பு: 817 விண்ணப்பங்கள் பதிவு!
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் சாா்பில் பணியாற்றுபவா்களுக்கான பி.இ. படிப்பில் சேர ஜூலை 11 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 817 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டே படிக்க விரும்புபவா்களுக்கான பி.இ. படிப்புகள் நடத்தப்படுகின்றன.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் - எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன், கணினி அறிவியல் ஆகிய 5 படிப்புகள் இதில் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டு முதல் மூன்றரை ஆண்டு (7 செமஸ்டா்) கல்வியாக நடத்தப்பட உள்ள இந்தப் படிப்புகளில் சேர விரும்புபவா்கள் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம், அது தொடா்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ல்ற்க்ஷங்-ற்ய்ங்ஹ.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்ப ஜூலை 11 -ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 5 -ஆம் தேதி (சனிக்கிழமை) வரை 817 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் 401 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டவை என்று ஒருங்கிணைப்பு மையமான கோவை தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி) நிா்வாகம் தெரிவித்துள்ளது.