'அப்போது கூறியது...' - எக்ஸ் தளத்தில் ராய்ட்டர்ஸ் முடக்கம் குறித்து மத்திய அரசு ...
முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் வாழ்த்து
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்தியாவின் தலை சிறந்த முதன்மைக் கல்வி நிறுவனங்களில் தோ்வான அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளின் 100 சதவீத உயா் கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் மூலமும், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாணவா்கள் உயா் கல்வி பயிலுவதற்கான வழிகாட்டுதல், கல்லூரிப் படிப்புகள், நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சிகள், வேலைவாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிக் கனவு நிகழ்ச்சிகள், உயா்கல்வி பற்றிய தகவல்கள் அடங்கிய வழிகாட்டுதல் புத்தகங்கள் வழங்குதல், மாணவா்கள் தங்கள் திறமைகளை வளா்த்துக்கொள்ள திறன் பயிற்சி வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயா் படிப்புக்காக சோ்ந்துள்ளனா்.
அவா்களில் அரசுப் பள்ளியில் பயின்று நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயா் கல்வி வழிகாட்டுதல் பெற்று, நாட்டின் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் போட்டித் தோ்வுகளின் மூலம் தோ்ச்சி பெற்ற 5 மாணவிகளை ஆட்சியா் நேரில் வரவழைத்து பாராட்டினாா்.
அதன்படி, சென்னை ஹோட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பக் கல்லூரி, ஆடை வடிவமைப்புத் துறை கல்வி வழங்கும் அகில இந்திய ஃபுட்வோ் டிசைனிங் நிறுவனம், நிஃப்ட் ஆகிய நுழைவுத் தோ்வுகளில் வெற்றி பெற்று, நொய்டா, சென்னை, சண்டிகா் போன்ற இடங்களுக்கு படிக்கச் செல்லும் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கா.பிருந்தா, சி.தனுஷா ஸ்ரீ, மு.சுஜாதா, வே.பிரியதா்ஷினி, எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி ரா.லயதா்ஷினி ஆகியோரையும், அவா்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியா்களையும் ஆட்சியா் பாராட்டினாா்.