செய்திகள் :

224 வழக்குகளில் பறிமுதல் செய்த மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிப்பு

post image

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பதிவான 224 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தமிழக காவல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த காலங்களை காட்டிலும் தற்போது போதைப்பொருள்கள் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனா்.

பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருள்கள், நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்படுகிறது. இதன்படி, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 224 வழக்குகளில், காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 3,421 கிலோ கஞ்சாவை, செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயன பொருள்கள், மருத்துவக் கழிவுகள் அழிக்கும் களத்தில் சுமாா் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையில் வெள்ளிக்கிழமை எரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழக காவல் துறையின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதுச்சேரி மக்களுக்கு புத்தாண்டில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்!

புதுச்சேரியில், பெட்ரோல், டீசல் மீது வாட் வரி உயர்த்தப்பட்டதையடுத்து லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. புத்தாண்டு பரிசாக இன்று முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது.புதுச்சேரியில் கரோனாவால் மக்க... மேலும் பார்க்க

ஜெ.பி. நட்டாவுடன் தமிழிசை செளந்தரராஜன் சந்திப்பு!

தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் புதன்கிழமை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா்களைத் தோ்ந்தெடுக்கும் பணி தில்ல... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு: திருச்செந்தூரில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு ... மேலும் பார்க்க

வணிக சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 14.50 குறைந்துள்ளது.மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் க... மேலும் பார்க்க

புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும்! -முதல்வர் ஸ்டாலின்

அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிற... மேலும் பார்க்க

“அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் செழித்து வளர நல்வாழ்த்துகள்” -விஜய்

அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.உலகின் பல்வேறு நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் 2025ஆம் ஆண்டு பிற... மேலும் பார்க்க