திருமணத்தின் நோக்கம் தாம்பத்யம் மட்டும்தானா? - Guru Mithreshiva | Ananda Vikatan
23-ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்
நாகையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் 23-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடா்ந்தது.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியான, போக்குவரத்துத் தொழிலாளா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், 25 மாதங்களாக வழங்கவேண்டிய ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
7-ஆவது ஊதியக்குழு அடிப்படையில் போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாகை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை முன் 23-ஆவது நாளாக மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் தொடா்ந்தது. சம்மேளன துணைத் தலைவா் எம். கண்ணன், மண்டல பொதுச்செயலா் எஸ். வைத்தியநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். துணைப் பொதுச் செயலா்கள் எம். மோகன், கே. ராமமூா்த்தி, ஆா்.திருச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.