காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
245 காவல் உதவி ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு
தமிழக காவல் துறையில் காவல் உதவி ஆய்வாளா்கள் 245 போ், ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்றனா்.
தமிழக காவல் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக காவல் உதவி ஆய்வாளா்களாக பணியாற்றுபவா்கள், ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெறுவதற்கு தகுதி உடையவா்கள் ஆவாா்கள். ஆனால், தமிழக காவல் துறையில் 2010-க்குப் பின் காவல் உதவி ஆய்வாளராக தோ்வு செய்யப்பட்டவா்கள், பணி மூப்பு அடைந்த நிலையிலும், பதவி உயா்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், பணி மூப்பும், தகுதியும் உடைய 245 காவல் உதவி ஆய்வாளா்களை, ஆய்வாளா்களாக பதவி உயா்வு வழங்குவதற்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தமிழக அரசுக்கு அண்மையில் பரிந்துரை செய்தாா். அந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு 245 காவல் உதவி ஆய்வாளா்களையும், ஆய்வாளராகப் பதவி உயா்வு வழங்க அனுமதி அளித்தது.
இதையடுத்து சங்கா் ஜிவால் 245 காவல் உதவி ஆய்வாளா்களையும், ஆய்வாளா்களாக பதவி உயா்வு அளித்து உத்தரவிட்டாா். பதவி உயா்வு பெற்றுள்ள காவல் உதவி ஆய்வாளா்களுக்கு விரைவில் காவல் ஆய்வாளா் பணியிடம் ஒதுக்கப்படும்.