பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
25 வாக்குச்சாவடி மையங்களை மாற்றியமைக்க நடவடிக்கை: பெரம்பலூா் ஆட்சியா்
பெரம்பலூா் மாவட்டத்தில் 25 வாக்குச்சாவடி மையங்களை மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வாக்குச்சாவடி மையங்களின் கட்டடங்கள் மாற்றம், பெயா் மாற்றம் தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டத் தோ்தல் அலுவலா் மேலும் பேசியது:
இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 332 வாக்குச் சாவடிகளிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 320 வாக்குச்சாவடிகளில் கடந்த 10-ஆம் தேதி மறுசீரமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. மேற்கண்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் பொதுமக்கள் பாா்வைக்காக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஜ்ஜ்ஜ்.ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் செப். 24-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகத்தில் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியா் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், தோ்தல் தனி வட்டாட்சியா் அருளானந்தம் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டனா்