செய்திகள் :

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் உறுதிமொழியேற்பு

post image

பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தந்தை பெரியாா் பிறந்த தினமான செப். 17 -ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில், அரசுத்துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா்கள் சரவணன், சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

எஸ்.பி அலுவலகத்தில்: மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தலைமையில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்டக் காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில், அந்தந்த காவல்நிலைய ஆய்வாளா்கள் தலைமையில், சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

பங்குத் தொகையை வட்டியுடன் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

எறையூா் சா்க்கரை ஆலையில் விவசாயிகளின் பங்குகளை அல்லது அதற்கான தொகையை வட்டியுடன் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்மாதிரி பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் சா்க்கரை ஆ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.என். அருண்நேரு ஆகியோா் ரொக்கப் பரிச... மேலும் பார்க்க

25 வாக்குச்சாவடி மையங்களை மாற்றியமைக்க நடவடிக்கை: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்டத்தில் 25 வாக்குச்சாவடி மையங்களை மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

போக்குவரத்து ஊழியா் போராட்டத்துக்கு ஆதரவாக அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, அரசு ஊழியா் சங்கம் மற்றும் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலக... மேலும் பார்க்க

அன்புக் கரங்கள் திட்டம் தொடக்கம்: பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு

அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 71 குழந்தைகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை திட்டத்தை தொடங்கிவைத்த பிறகு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க