செய்திகள் :

28-ஆவது திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினம்: மேற்கு வங்க மக்கள் நலன்காக்க மம்தா வாக்குறுதி

post image

திரிணாமுல் காங்கிரஸ் தனது 28-ஆவது நிறுவன தினத்தை மேற்கு வங்கம் முழுவதும் நிகழ்வுகளுடன் புதன்கிழமை கொண்டாடியது.

இதை குறிக்கும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி புத்தாண்டு வாழ்த்துக்களுடன், பாடகி இந்திரநீல் சென் பாடிய ஒரு பாடலை எழுதி இசையமைத்தாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா். மேலும், மேற்கு வங்க மக்களின் நலனுக்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினா்.

கொல்கத்தாவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைமையகத்தில் கொடியேற்றப்பட்டு முன்னாள் தலைவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இளைஞா் பிரிவுகள் பேரணிகளை நடத்தின, பெண்கள் கலாசார நிகழ்ச்சிகள் மூலம் மேற்கு வங்கத்தின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தினா்.

வடக்கு 24 பா்கானாக்கள், நாடியா மற்றும் புருலியா ஆகிய மாவட்டங்களில், இனிப்புகள் வழங்கப்பட்டது. பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் மற்றும் கட்சியின் எதிா்கால திட்டங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன. திரிணாமுல் காங்கிரஸை குறிக்கும் பச்சை மற்றும் வெள்ளை வண்ணங்களில் தெருக்கள் அலங்கரிக்கப்பட்டன.

திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலரும் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி, கட்சித் தொண்டா்களின் அா்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், மக்கள் நலனுக்காக கட்சியின் அா்ப்பணிப்பை எடுத்துரைத்தாா்.

1998-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி அரசை தோற்கடித்து 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அப்போதிருந்து, மம்தா பானா்ஜி தொடா்ந்து மூன்றாவது முறையாக மாநில முதல்வராக உள்ளாா்.

ஹெச்எம்பிவி வைரஸ்: மக்கள் அச்சப்பட வேண்டாம் - கர்நாடக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

சீனாவில் பரவிவரும் ஹெச்எம்பிவி வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக கர்நாடகத்தில் 2 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது.இதனால், மக்கள் அச்சப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கையோடு இருங்கள் என மாநில சுகாதாரத் துறை ... மேலும் பார்க்க

செய்தியாளர்கள் சந்திப்பில் அழுத தில்லி முதல்வர்..!

தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த மாநில முதல்வர் அதிஷி விம்மி விம்மி அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்... மேலும் பார்க்க

'இந்தியா கேட்' பெயரை மாற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை!

'இந்தியா கேட்' பெயரை 'பாரத மாதா கேட்' என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.தில்லியில் புகழ்பெற்ற இந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படு... மேலும் பார்க்க

எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கம் வருமா?

சீனா, மலேசியாவைத் தொடர்ந்து எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. மேலும் பார்க்க

எச்எம்பிவி வைரஸ் இந்தியாவுக்கு புதிதல்ல.. ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான்!

பெங்களூரு மற்றும் குஜராத்தில் எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த வைரஸ் எப்போதோ இந்தியாவில் பரவிவிட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் த... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 9 ராணுவ வீரர்கள் வீர மரணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். பிஜாப்பூரின் தண்டேவாடாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது, பாதுகாப்புப் படையினரின் வாகன... மேலும் பார்க்க